search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மீக சொற்பொழிவு"

    • மதுரை சோழவந்தான் கோவிலில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • மதுரை சோழவந்தான் கோவிலில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    சோழவந்தான்

    சோழவந்தானில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான பத்திர காளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பூசாரி சண்முகராஜா வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வந்தார். பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். சந்தன அபிஷேகம், அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா, முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்வும், அன்னதானமும் நடந்தது. விழாவையொட்டி தினமும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடந்தன.

    இதற்கான ஏற்பாடுகளை தலைவர் கவுதமராஜா, செயலாளர் ஜெயராஜ், உதவி தலைவர் இளமாறன், துணைச் செயலாளர் அய்யப்பராஜா, பொருளாளர் செல்வகுமார் மற்றும் மகளிர், இளைஞர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது.
    • இந்த நிகழ்ச்சியில் ஜோதிடர் கரு.கருப்பையா பேசுகிறார்.

    மதுரை

    முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணி யசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    இதையொ ட்டி நாள்தோறும் சன்னதி தெருவில் உள்ள கலையரங்கில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பங்குனி உத்திர தினமான நாளை (5-ந்தேதி) மாலை 6 மணிக்கு சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது.

    தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவரும், பட்டிமன்ற நடுவருமான மடப்புரம் விலக்கு ஜோதிடர் கரு.கருப்பையா "கந்தன் கருணை" என்ற தலைப்பில் பேசுகிறார்.

    முன்னதாக திருப்பரங்குன்றம் வக்கீல் அழகுசுந்தரம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகிறார். இதையடுத்து இரவு 7 மணிக்கு பசுமலை ஜெயாலயா நாட்டிய பள்ளி கீதாபாலா கலைக்குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.

    • ராமேசுவரத்தில் வருகிற 1-ந் தேதி ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது.
    • “ஹரே ராமா ஹரே கிருஷ்ணா” அமைப்பின் சார்பில் கிருஷ்ணன் உபதேசம் என்னும் தலைப்பில் நடக்கிறது.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" அமைப்பின் சார்பில் கிருஷ்ணன் உபதேசம் என்னும் தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது.

    இதில் நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்க 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ராமேசு வரத்திற்கு வருகை தர உள்ளனர். இதன் காரணமாக ராமேசுவரம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டது. சொற்பொழிவு ஏற்பாடு களை நிர்வாகிகள் செய்து வருகின்றனர். அக்டோபர் 1 முதல் 5-ந் தேதி வரை ராமேசுவரத்தில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி விட்டது. எனவே மேற்கண்ட நாட்களில் வெளியூர் பக்தர்களுக்கு அறை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    • முன்னதாக, கிருஷ்ணமூர்த்தி பாகவதர் குழுவினரின் கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதற்கான ஏற்பாடுகளை, பா.ஜ.க.தொழில்துறை பிரிவு மாநில துணைத்தலைவர் கே.ராமலிங்கம், மோகன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

    ஓசூர்,

    ஓசூரில், சுவாமி விவேகானந்தா எழுச்சி பேரவை சார்பில், ஆன்மீக சொற்பொழிவு நேற்று நடைபெற்றது.

    ஓசூர் தர்கா பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், மதுராந்தகம் யோக சாந்தி குருகுல நிறுவனர் சுவாமி பிரம்மயோகானந்தா கலந்துகொண்டு, அருளாசி வழங்கி, சொற்பொழிவாற்றினார்.

    முன்னதாக, கிருஷ்ணமூர்த்தி பாகவதர் குழுவினரின் கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, பா.ஜ.க.தொழில்துறை பிரிவு மாநில துணைத்தலைவர் கே.ராமலிங்கம், மோகன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

    இதில் விசுவ இந்து பரிஷத் மாநில இணைசெயலாளர் விஷ்ணுகுமார், அன்னையப்பா, மாவட்ட செயலாளர் கிருஷ்ணா, சம்பத், தங்கராஜ், திருமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், செல்வகுமார் நன்றி கூறினார்.

    திண்டுக்கல் ரவுண்டு ரோடு சாதன பஞ்சகம் என்ற ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல், சிறுமலை ரோடு அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா தட்சிணாமூர்த்தி ஆலய வளாகத்தில் ஸ்ரீமத் பகவத் கீதை அந்தர் யோகம் 14வது அத்தியாயமான குணத்ரய விபாக யோகம் என்ற தலைப்பில் ஸ்ரீ ஸ்வாமி ஞான சிவானந்தர் அவர்களின் விளக்கவுரை நாளை காலை 10 மணி முதல் 1.15 வரை நடைபெறுகிறது.

    மாலை 5.30 மணிக்கு திண்டுக்கல் ரவுண்டு ரோடு வெற்றி அகாடமியில் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரம ஸ்வாமி நித்ய சத்வானந்தர் ஆதி சங்கரர் அருளிய சாதன பஞ்சகம் என்ற ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது.

    திண்டுக்கல்லில் ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெறுகிறது.

    திண்டுக்கல், ஜூலை.16-

    திண்டுக்கல் சிறுமலை ரோடு, ஸ்ரீ வித்யா தட்சணா மூர்த்தி ஆலய வளாகத்தில் காலை 11.00 மணிக்கு ஸ்ரீ சுவாமி ஞான சிவானந்தர் பஞ்சமவனா பூதவிவேகம் என்ற தலைப்பிலும்,

    மாலை 5.30 மணிக்கு திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள வெற்றி அகாடமியில் ஸ்ரீராம கிருஷ்ண ஆசிரம சுவாமி நித்ய சத்வானந்தர், ஆதிசங்கரர் அருளிய சாதன பஞ்சகம் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெறுகிறது.

    ×